அடுத்த மாதம் 15,000 பட்டதாரிகள் பயிற்சியில் இணைப்பு..!


நாடுபூராகவும் தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளை அரச துறைகளில் பயிற்சிகளில் சேர்த்துக்கொள்வதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கைகயில் சுமார் 15,000 பட்டதாரிகள் பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இணைத்துக்கொள்ளப்படவுள்ளோரின் வயதெல்லை 35 லிருந்து 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரச துறைகளில் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கு ஒரு வருடகால பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சிக்காலத்தில் ரூபா 20,000/- கொடுப்பனவாகவும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், பயிற்சியை பூர்த்தி செய்யும் பட்டதாரிகள் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கைமேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

தகவல்: வேலைத்தளம் இணையதளம்.
Previous Post Next Post