பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு அடுத்த 2 மாதங்களில்..!


சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக சென்ற மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

விண்ணப்பங்கள் கோரப்பட்டதையடுத்து இதுவரை 10,000 இற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்காக நிலவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 630 வெற்றிடங்களை நிரப்புவதை நோக்கமாகக்கொண்டே மேற்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டன.


இதற்கான ஆட்சேர்ப்பு அடுத்த 2 மாத காலத்தினுள் இடம்பெறவுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வேலைத்தளம் இணையதளம்


Previous Post Next Post