3,200 வருடம் பழமை வாய்ந்த கல்லறையில் இருந்து சீஸ் கண்டுபிடிப்பு..!


இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சீஸ் எனக் கருதப்படும் ஓர் பொருள் எகிப்து நாட்டின் 3,200 வருடம் பழமை வாய்ந்த ஓர் கல்லறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .


தொல்பொருளியலாளர்களினால் பண்டைய எகிப்தின் ஓர் முக்கிய பிரபுவான 'Ptahmes' எனப்படுபவரின் கல்லறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் அக்காலத்துக்கு உரித்தான சில உடைந்த பாத்திரங்களின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.அதில் ஓர் பாத்திரத்தில் திண்ம நிலையில் இருந்த ஓர் வெள்ளைநிற பொருள்  அக்காலத்திற்கு உரித்தான ஓர் உணவுப்பொருளாக இருக்கலாம் இன்று ஆராய்ச்சியாளர்களால் ஊகிக்கப்பட்டாலும், அது என்னவென்று அவர்களால் ஓர் சரியான முடிவினை எட்டமுடியவில்லை.


எனினும், அதன் பிறகு நடாத்தப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளின் பின், இது பண்டை எகிப்தில் மக்கள் உணவுக்காகப் பயன்படுத்திய சீஸ் என கண்டுபிடிக்கப்பட்டது.

பண்டைய எகிப்தில் சீஸ் உற்பத்தி செய்யப்பட்டமைக்கான சான்றுகள் இதற்கு முன்னரான தொல்பொருள் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், 3,200 வருடம் பழமையான இக்கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட இச்சீஸ் வகையே உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த சீஸ் என கருதப்படுகிறது.
Previous Post Next Post