படங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...


இந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அங்கே பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை சரியாக கணிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெருமளவு உயிரிழப்புக்கள் சுனாமியினால் ஏற்பட்டதா அல்லது நிலநடுக்கத்தினால் ஏற்பட்டவையா என்பது பற்றியும் தெரியவில்லை.

தகவல் தொடர்பாடல் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள்ள நிலையில், அங்கே ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி இதுவரையில் சரியான தகவல்களும் வெளிவரவில்லை. சுனாமில் அலைகளில் கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்ட சிலரின் உடல்கள் இன்னுமும் கரையொதுங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்தும் அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை.

படங்கள்:

Previous Post Next Post