Latest Updates

தரம் 5 புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பு மற்றும் மாணவர்களை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை..!


தரம் 5 புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரித்தல் மற்றும் புலமைப்பரிசில் நிதியினை அதிகரித்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி கற்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் நோக்கிலேயே மேற்படி விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுவர்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது, வருடாந்தம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கி சித்திபெறும் 15,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : Daily Ceylon