8 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒரே பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்.


தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் கடமைபுரியும்  ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இடம்பெற்ற ஓர் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், கல்வித்துறை சார்ந்த நிர்வாக கட்டமைப்புக்களில் நிர்வாக ரீதியான சீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலை மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்ற போது தான், எதிர்ப்புக்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறான மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் இடம்பெறாவிடின் சர்வதேச ரீதியான வளர்ச்சிக்கு ஒப்பான வளர்ச்சியை இலங்கை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போகலாம் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வேலைத்தளம் இணையதளம்


Previous Post Next Post