அவுஸ்திரேலியாவில் இருந்து 3000 கிலோமீட்டர் தொலைவிலும் பசிபிக் பெருங்கடலில் வடகிழக்காகவும் 'நாவுரு அல்லது நவுரா' என்று அழைக்கப்படும் இத்தீவு அமைந்துள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்பு ஓர் இனிமையான தீவு என அழைக்கப்பட்ட இத்தீவு தற்பொழுது பல துயரக்கதைகளுக்கு சொந்தமான ஓர் தீவாக மாறிவருகிறது.

ஆம், அதற்குக் காரணம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய  முயற்சிப்போரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இத்தீவிற்கு நாடுகடத்தி அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும் தடுப்பு காவல் முகாம்களில் அடைப்பதேயாகும்.


அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நடாத்தப்படும் இத்தடுப்பு முகாம்களினால் தான் இந்த சிறுதேசத்திற்கு பெருமளவு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. அதனைத் தொடர்ந்து இத்தீவிலுள்ள பாஸ்பேட் சுரங்கங்களே இத்தீவின் முக்கிய வருமானமாகக் காணப்படுகிறது. இன்னும் 30 ஆண்டுகளில் இந்த பாஸ்பேட் வளமும் தீர்ந்துவிடுமென கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய நாடுகளின் உதவியிலேயே இந்நாடு தங்கி இருக்கவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.

நிலைமை இவ்வாறு இருக்க, இத்தீவிலுள்ள தடுப்பு முகாம்களில் அகதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சர்வதேச அளவில் விவாத பொருளாகி உருவெடுத்துள்ளது.

எதிர்காலத்தைப் பற்றி கடுகளவுகூட எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இங்கே சிதைந்துபோன ஓர் வாழ்க்கையில் மாட்டிதவிக்கும் இவர்களில் பலருக்கும் தற்கொலை எண்ணம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 8 முதல் 10 வயது சிறுவர்களிடம் கூட தற்கொலை எண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது என்றால் அங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் அவல நிலையை கற்பனைசெய்துகொள்ள முடிகிறது. இதற்கு முன்பு இத்தடுப்பு முகாம்களின் வாழ்ந்த பலர் இறந்துபோயுள்ளனர்.இந்த தடுப்பு முகாம்களில் மருத்துவ வசதிகள் இருந்தாலும், அவை போதுமானதாக கிடைப்பதில்லை. உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டால் நாவுரு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்பே வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்லப்படவேண்டும்.

இம்மக்களின் நலனுக்ககாக அவுஸ்திரேலியா உற்பட சில நாடுகளைச் சேர்ந்த மக்கள் இன்றுவரை போராடிவருகின்றனர்.YouTube Video: தீயவர்களின் கூட்டமைப்பு எப்போதும் தீமையையே தரும் - Vijay Seetharaman

Previous Post Next Post