வாய் சிகத்து வெந்து போனாலும் வெற்றியை மட்டும் தேடும் விநோதமான போட்டி..!


வருடம்தோறும் சீனாவின் 'ஹுனான்' பிரதேசத்தில் நடைபெறும் இவ்விநோதமான மிளகாய் உண்ணும் போட்டி உலக அளவில் பிரசித்திபெற்றுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளன.

போட்டியாளர்கள் ஓர் நீர் நிறைத்த பெரிய பாத்திரத்தினுள் இறங்கி வேகமாக சிவப்பு மிளகாய்களை உட்கொள்ள வேண்டும். ஆண், பெண் வேறுபாடில்லாமல் யார் வேண்டுமானாலும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

இவ்வருடம் நடைபெற்ற போட்டியில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த Tang Shuaihui என்பவர் ஒரு நிமிடத்தினுள் 50 மிளகாய்களை உட்கொண்டு வெற்றிவாகை சூடினார்.


படங்கள்:Previous Post Next Post