புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல்..!


புதிதாக அரச நியமங்களைப் பெற்ற பட்டதாரிகள் பெரும்பாலானோர் சேவைக்கு சமூகமளிப்பதில் தாமதம் காட்டுவதாகவும், இவ்விடயம் தொடருமெனின் அவர்களின் நியமனங்கள் ரத்துச்செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரச சேவைக்கு புதிதாக 4100 கும் அதிகமானோர் அண்மையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவ்வாறு நியமனம் பெற்ற பட்டதாரிகள் பெரும்பாலோனோரே சேவைக்கு சமூகமளிப்பதில் தாமதம் காட்டுவதாகவும், இதுபற்றி  தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சசின் மேலதிக செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக 'வேலைத்தளம்' இணையதளதில் வெளியிடப்பட்டிருந்த செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
Previous Post Next Post