இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் - சுனாமி அபாய எச்சரிக்கை.!


சற்றுமுன் இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவில் 7.5 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதை அடுத்து அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலநடுக்கத்தில் இதுவரை ஒருவர் பலியானதுடன் மேலும் 10 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது, சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதெனினும் தொடர்ந்தும் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Previous Post Next Post