உலக கல்வி நிறுவனங்களின் தரப்பட்டியல்... முதல் இடம் யாருக்கு?


உலகலாவிய ரீதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரப்பட்டியலை 'டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டிருந்தது. மாணவர்களின் எண்ணிக்கை, கல்வியின் தரம், சுற்றுச் சூழல் மற்றும் பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இத்தரவரிசை ஒழுங்கமைக்கப்பட்டது.

இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் ஆகியன முதல் இரண்டு இடங்களையும் பிடித்து உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களாகத்  தெரிவுசெய்யப்பட்ட்டன. மூன்றாவதாக அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த பல்கலைக்கழகமாக தெரிவுசெய்யப்பட்டது.

ஆசிய கண்டத்தை பொறுத்தமட்டில், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் உலகின் 22 வது சிறந்த பல்கலைக்கழகமாகத் தெரிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post