அடுத்த ஆண்டிற்கான பாடப்புத்தக விநியோகம் நாளை ஆரம்பம்..!


அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான முதற்கட்டப் பணி 3ம் தவணை பாடசாலை ஆரம்பத்துடன் முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இம்முறை 419 பாடங்களுக்கான 3 கோடி, 80 இலட்சம் பாடப்புத்தக்கங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேல் மாகாணப் பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதாக கல்வி வெளியீட்டுப் பிரிவின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக உயர்தர மற்றும் உயர்கல்விக்கான ஆசிரியர்களுக்குத் தேவையான மேலதிக 359 பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆதாரம்: அரசாங்க செய்தி இணையதளம்.


Watch: மாணவர் உலகம் - YouTube Videos

Previous Post Next Post