இணையத்தில் மணித்தியாலத்திற்கு 10-12 டாலர்கள் சம்பாதிப்பது எப்படி? | Earn US$10-12/Hour with Appen


Appen ஊடாக எவ்வாறு இணையத்தில் பணம் சம்பாதிப்பது?

Appen என்பது ஒரு முன்னணி தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம்  சமூகவலைத்தளங்கள், வலைத் தேடல் பொறிகள் போன்றவற்றை ஆய்வு செய்தல் போன்ற துறைகளில் Facebook மற்றும் Google போன்ற நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குகின்றது.


இந்நிறுவனம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இணையம் மூலம் குறித்த துறையில் தொழில்வாய்ப்புக்களை வழங்கிவருகிறது. நீங்கள் இங்கே ஓர் தேடுபொறி ஆய்வாளர்/பரிசோதகர், சமூக வலைதள ஆய்வாளர்/பரிசோதகர், மற்றும் Transcriptionist என உங்கள் தகைமைக்கு ஏற்ப இணையவழி தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 

இங்கே ஓர் இணையவழி வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள சமூகவலைத்தளங்கள்/தேடல் பொறிகள் பற்றி அறிவு மற்றும் போதிய ஆங்கில அறிவும் உங்களிடம் இருந்தாலே போதுமானது.


அத்துடன், இங்கே உங்கள் வசதிக்கு ஏற்ப பகுதி நேரம் / முழு நேரம் என எப்படி வேண்டுமானாலும் வேலை செய்யலாம். இங்கே உள்ள தொழில் வாய்ப்புக்கள் பலவற்றிலும் நீங்கள் வேலை செய்யும் நாள் மற்றும் நேரத்தினை சுயாதீனமாக நீங்களே முடிவுசெய்யலாம். நேரம் கிடைக்கும் போது மட்டும் வேலை செய்யவும் முடியும். ஏனினும், சில பகுதி நேர வேலைவாய்ப்புகளுக்கு மட்டும் ஒரு நாளில் அதிகபட்சம் 4 மணி நேரம் (20 மணி/கிழமை) மட்டுமே  செய்யும் வரையறையும் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விணையத்தளத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் மணிக்கு சுமார் 10-12 டாலர்கள் (அண்ணளவாக 700-INR / 1500-LKR) வழங்கப்படுகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் இணைத்துக்கொள்ளும் வேலையைப் பொருத்து குறிப்பிடத்தக்களவு வருமானம் பெறப்படுகிறது.

உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, சுயவிபரக்கோவை முதலில் தகவல்களை வழங்கி நீங்கள் Appen உடன் இணைந்துகொள்ளலாம். உங்களை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு உறுதிப்படுத்தப்படும்.

Appen இணையதளத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும். தற்போதைய வேலைவாய்ப்புத் தகவல்களை பற்றி அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும்.


Previous Post Next Post