2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.


இவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்களால் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதி கட்டங்களில் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத்பி பூஜித தெரிவித்துள்ளார். அத்துடன் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட இன்னும் 2-3 நாட்கள் தாமதமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இம்மாதம் 30 ஆம் திகதி அளவில் பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்: mytutor-lk

Previous Post Next Post