பட்டதாரி ஆசிரியர் நியமனம் - வடமேல் மாகாணம் | NWP


வடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற தமிழ், சிங்களம் மற்றும்  ஆங்கில மொழிமூல பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3-I(அ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018

பின்வரும் தமிழ் மொழிமூல பாடங்களுக்கு வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • கணிதம்.
  • விஞ்ஞானம்.
  • சித்திரம்.
  • தகவல் தொழில்நுட்பம்.
  • சுகாதாரம் மற்றும் உடற்கல்வி.
(வடமேல் மாகாண விண்ணப்பதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்).


வடமேல் மாகாணதில் குருநாகல் மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் குருநாகல் மாவட்ட பாடசாலைகளிலும், புத்தளம் மாவட்டத்தை சேர்த்தவர்கள் புத்தளம் மாவட்ட பாடசாலைகளிலும் நியமனம் பெற முன்னுரிமை வழங்கப்படுவர்.

மேற்குறிப்பிடப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன சிங்கள மொழியில் மட்டுமே எமக்கு இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கிடைக்கப்பெற்றதும் விரைவில் இங்கே பதிவிடப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019-01-14

Source - Government Gazette (2018.12.14)

முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை (சிங்கள மொழியில் பெற) இங்கே அழுத்துங்கள்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இதுபற்றிய வர்த்தமானி அறிவித்தல் கிடைக்கப்பெற்றவுடன் விரைவில் பதிவிடப்படும்.
Previous Post Next Post