மத்திய கிழக்கு நாடுகளுக்கு என தனியான கடவுச்சீட்டு இனி விநியோகிக்கப்படாது | News


அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் என விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட மாட்டா என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கைகள்  ரத்துச்செய்யப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஓர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே, அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அணைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post