ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...


வடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதில் தமிழ் மொழிமூல கணிதம், விஞ்ஞானம், சித்திரம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற பாடங்களுக்கு வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வடமேல் மாகாண விண்ணப்பதாரிகளுக்கே இங்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பள அளவுத் திட்டம் - ரூபா 27,740 – 6 x 300- 07 x 380 – 2 x 445 – ரூபா. 33,090 ஆகும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2019-01-14.

இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான இத்திறந்த போட்டிப் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இதுவரை சிங்கள மொழியில் மட்டுமே எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.


மூலம்: அரச வர்த்தமானி
Previous Post Next Post