3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.

3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தமது நியமனங்களுக்காக விளையாட்டு பயிற்சியாளரகள் நீண்ட காலம் போராடி வந்த நிலையில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி என்பது அவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியே என்பதில் சந்தேகமில்லை.


Previous Post Next Post