சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை | News


நாட்டிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு மாத்திரமே விடுமுறை வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பலரினதும் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post