எதியோப்பியாவின் தலைநகரில் இருந்து கென்யாவின் நைரோபி நகர் நோக்கி புறப்பட்ட ஓர் விமானம் இன்று (2019/03/10) விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதியோப்பிய விமான சேவையின் Boeing 737 வகையை சேர்ந்த இவ்விமானம், ஓடுபாதையிலிருந்து பறக்கத் துவங்கி சுமார் 6 நிமிடங்கள் மட்டுமே கடந்த நிலையில் இவ்வாறு எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 149 பயணிகளும், 8 பணியாளர்களும் இவ்விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்துக்கான கரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை எனினும் விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து  அந்நாட்டின் பிரதமர் விபத்துக்குள்ளான பயணிகளின் குடும்பங்களுக்கு twitter மூலமாக தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.


எதியோப்பிய தலைநகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலேயே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், மீட்புப் பணியாளர்கள் அவ்விடத்தை நோக்கி விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வகையை சேர்ந்த Lion Air விமான நிறுவனத்திற்கு சொந்தமான  விமானமொன்று அண்மையில் இந்தோனேசியாவை அண்மித்த கடற்பரப்பில் 190 பயணிகளுடன் விபத்துக்குள்ளாகியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.


YouTube Video: மனித மாமிசம் உண்ணும் குள்ள மனிதர்கள்



Previous Post Next Post