1985 - 1995 பிறந்த நீங்கள் தனித்துவமான ஓர் தலைமுறை... ஏன் தெரியுமா?


1985 - 1995 இல் பிறந்த நீங்கள் மட்டும் ஓர் தனித்துவமான தலைமுறைக்கு உரித்தானவர்கள்... ஏன் தெரியுமா? 

1. நீங்கள் இணையம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சிக்கு முந்திய மற்றும் பிந்திய தலைமுறையினருக்கு இடைப்பட்டவர்கள். நீங்கள் ஓர் நூற்றாண்டின் (Century) முடிவையும் இன்னொரு நூற்றாண்டின் தொடக்கத்தையம் சந்தித்தவர்கள். அதேபோல் ஓர் ஆயிரம் ஆண்டுகாலத்தின் (Millennium) முடிவையும் இன்னொரு ஆயிரம் ஆண்டுகாலத்தின்தொடக்கத்தையம் சந்தித்தவர்கள்.

2. உங்கள்குக்கு முந்திய தலைமுறையினர் கடின உழைப்பை நம்பும்போது உங்களுக்கு பிந்திய தலைமுறையினர் புத்திசாதுரியமாக உழைப்பதைப் பற்றி சிந்திப்பவர்கள்.

3. நீங்கள் பழங்கால வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி முதல் CD, DVD  இல் இருந்து smartphone, USB, microchips, virtual reality என எல்லாவற்றையும் பயன்படுத்தியவர்கள். மேலும், நீங்கள் மட்டுமே Supper Mario போன்ற TV கேம்ஸ் முதல் PS4, Xbox, PUBG வரை விளையாடியும் இருப்பீர்கள்.


4. உங்களுக்கு முந்திய தலைமுறையினர் ஒரு மின்னஞ்சல் முகவரியை மட்டுமே வைத்திருப்பார்கள், அதிலும் ஓர் மின்னஞ்சல்/குறுந்தகவல் மூலம்  பணம் கேட்டு அல்லது அன்பினை காட்டி இலகுவாக அவர்களை ஏமாற்றிவிட முடியும். ஆனால் உங்களுக்கு பிந்திய தலைமுறையினர் ஒன்றுக்கு 4 மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருப்பார்கள். இம்மின்னஞ்சல் முகவரிகளில் ஒன்று தனிப்பட்ட அல்லது முக்கியமான விடயங்களுக்கும், இன்னொன்று பணப்பிரிமாற்றம் மற்றும் வங்கி தொடர்பாடலுக்கும், இன்னுமொன்று சமூக வலைத்தளங்களுக்கும், மற்றையது இணையத்தில் தெரியாத மற்றும் நம்பகமற்ற விடயங்களை பரிசோதித்துப் பார்க்கவும் வைத்திருப்பார்கள். 😃

5. நீங்கள் கைத்தொழில் யுகத்திற்கும் தொழில்நுட்ப யுகத்திற்கும் இடைப்பட்டவர்கள். இரு யுகங்களையும்ப் பற்றிய தெளிவான சிந்தனையும் அனுபவமும் உங்களிடம் இருக்கும். உங்களுக்கு முந்தியவர்கள் நவீன உலகில் என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் இருப்பார்கள், உங்களுக்கு பிந்தியவர்களுக்கு எது எங்கிருந்து வந்தது மற்றும் உலகம் எப்படி இயங்குகிறது என்ற போதிய அறிவு இல்லாமல் இருக்கும்.

ஒட்டுமொத்தத்தத்தில் இந்த உலகை ஆட்சி செய்ய தகுதியானவர்களும் நீங்களே..! 😉

பகிருங்கள்...

நன்றி - இணையம்
Previous Post Next Post