அண்மையில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட Emflux Motors எனும் இலத்திரனியல்  மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் முதல் தடவையாக Emflux One எனும் தனது இலத்திரனியல்  மோட்டார்சைக்கிளை EICMA வாகனக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இவ்வாறு காட்சிப்படுத்த இந்த மோட்டார் சைக்கிள் மொடல் தற்போது சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியான நிலையில் உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த் மோட்டார் சைக்கிளானது 82 குதிரை வலுவுடைய (horsepower) இலத்திரனியல்  மோட்டர் ஒன்றினையும், 40 நிமிடங்களில் full charge செய்யக்கூடிய 9.7 kWh லித்தியம் பேட்டரி ஒன்றிணையும் கொண்டுள்ளது .

வெறும் மூன்றே செக்கன்களில் 100 கிலோமீட்டர் வேகத்தினை எட்டக்கூடிய இந்த மோட்டார் சைக்கிளில் மணிக்கு 200 கிலோமீட்டர் எனும்  ஆகக்கூடிய வேகத்தில் செல்ல முடிவதுடன், ஒருமுறை full charge செய்த பேட்டரியுடன் 200 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவும் முடியும்.

'Electric Superbike' என அழைக்கப்படும் இம்மோட்டார் சைக்கிளில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மீட்டர் திரையில், Bluetooth, GPS Navigation மற்றும் Real Time Motorcycle Diagnose System போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இம்மோட்டார்சைக்கிள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இத்திரையில் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்திய ரூபா 600,000 பெறுமதியுடன் சந்தைக்கு வரவுள்ள இந்தியாவின் இந்த இலத்திரனியல் மோட்டார்சைக்கிலானது இலத்திரனியல் மோட்டார்சைக்கிள் உலகில் புதியதோர் புரட்சியை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது.
Previous Post Next Post