அறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)


அறிமுகம்
துப்பறிவாளர் நேசமணி 
(மற்றும் Dr சுந்தரம்) 
கதைகள்..!

துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் வாழ்ந்துவந்த தொழில் ரீதியான சக நண்பர்கள்...

துப்பறிவாளர் நேசமணி:

நேசமணி இந்தியாவில் தமிழ் நாட்டில் பிறந்தவர். அன்னை தெரசா சிறுவர் இல்லத்தில் வளர்ந்த நேசமணி, பிறந்து சில நாட்களிலேயே தாய் மற்றும் தந்தையை  இழந்த ஓர் அநாதை சிறுவன். பாடசாலை பருவம் தொட்டு கணிதம், விஞ்ஞானம் உட்பட கல்வியில் பல துறைகளிலும் அதீத திறமை வெளிக்காட்டியவர். விளையாட்டு மற்றும் கலைத்துறையிலும் கலக்கியவர்.

பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட நேசமணி தனது பட்டப்படிப்பை தொடர்ந்து குற்றவியல் மற்றும் புலனாய்வுத் துறையில் PhD பட்டம் பெற்றார். தற்போது சென்னையை தளமாகக் கொண்டு இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் துப்பறிவாளராக சுயமாக சேவைபுரிந்து பல சிக்கலான பிரச்சினைகளையும், விடைதெரியாத மர்மங்களையும் தீர்த்துவைத்து தனக்கென ஓர் அடையாளத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.


Dr சுந்தரம்:

Dr சுந்தரம் இலங்கையில் பிறந்து தொழில் நோக்கமாக இளம் வயதில் இந்தியாவை வந்தடைந்தவர். இவருக்கு டாக்டர் பட்டம் எங்கிருந்து கிடைத்தது என்று அவருக்கே சரியாகத் தெரியாது. 😁

துப்பறிவாளர் நேசமணியிடம் இருந்து செலவுக்கு பணம் கிடைக்காத போது மட்டும் தனது டிஸ்பென்சரியை திறப்பார். இவரிடம் ஒருமுறை வைத்தியம்பார்க்க வந்த நோயாளிகள் எவரும் மீண்டும் ஒருபோதும் இவரிடம் வரும் தேவை ஏற்படுவதில்லை. (இவரு ஒன்னும் அவ்வளவு பெரிய டாக்டர் இல்லேங்க, இவரு கொடுத்த மருந்து மாத்திரையை சாப்பிட்ட எல்லாரையுமே அவசர சிகிச்சை பிரிவுக்கு உடனடியா அட்மிட் பண்ண வேண்டி வந்தது தான் கரணம்.. 😄😁🤣🤣🤣)

--------------

துப்பறிவாளர் நேசமணிக்கு தனது துப்பறிவாளர் தொழிலுக்கு ஒரு சகா மற்றும் அல்லக்கை தேவை என்கிறதால Dr சுந்தரதுக்கு அடைக்கலம் கொடுத்து Dr சுந்தரத்தை தன்னுடன் கூடவே வைத்திருந்தார்.

துப்பறிவாளர் நேசமணி, Dr சுந்தரம் இருவரும் சென்னையில் 'பாBய்கடை வீதி' யில் உள்ள ஓர் அடுக்கு மாடித் தொகுதியில் உள்ள ஓர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர்.

பல்வேறுபட்ட சிக்கல்களிலும் இன்னல்களிலும் மாட்டித் தவிக்கும் பலரும் தமக்கு உதவக் கோரி துப்பறிவாளர் நேசமணியிடம் வருவார்கள். இதில் தனது பணம், நகை, மற்றும் சொத்துக்களை இழந்தவர்கள் உற்பட காணாமல் போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறும் பலர் நேசமணியை தேடிவருவார்கள். மேலும் பணம் கேட்டு மிரட்டல்கள், மற்றும் தான் செய்யாத குற்றங்களுக்கு தண்டிக்கப்படவிருக்கும் நிரபராதிகள், பேய் பிசாசு மிரட்டல்கள் என பல கேஸ்கள் (Cases) நேசமணியை தேடி வரிசையாக வந்துகொண்டே இருக்கும். (இவர்களின் கேஸ்களை தீர்ப்பது பற்றி துப்பறிவாளர் நேசமணி சிந்திக்க ஆரம்பிக்கும் முன்னரே, இவர்களிடமிருந்து எவ்வளவு பணம் கறக்கலாம் என Dr சுந்தரம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிடுவார்... 😄 😄)

இத்தனை கேஸ்கள் நேசமணியை தேடி வருவதற்கான கரணம், யாராலும் தீர்க்கமுடியாத பிரச்சினைகளையும், எவராலும் கண்டுபிடிக்க முடியாத பல மர்மங்களையும் நேசமணி தனது துப்பறியும் திறமையைக் கொண்டு எப்படியாவது கண்டுபிடித்துவிவார் என்ற நம்பிக்கை அவரை தேடிவருபவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தமை தான். இதுவே துப்பறிவாளர் நேசமணியை பற்றிய இந்தியாவில் மட்டுமின்றி அயல் நாடுகளிலும் பலர் அறிந்துவைத்திருந்தமைக்கு காணரமாக அமைந்தது.

போலீசார் கூட ஒரு கட்டத்தில் தீர்க்க முடியாத சவால் மிகுந்த கேஸ்களையெல்லாம் முடித்துக்கொள்ள துப்பறிவாளர் நேசமணியிடமே தஞ்சமடைந்தனர்.

எந்தவொரு கேஸ் (Case) என்றாலும் துப்பறிவாளர் நேசமணி முதலில் அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்த பின்னரே அதனை ஏற்றுக்கொள்வார். தன்னை ஏமாற்ற நினைத்து தனது காலத்தையும், நேரத்தையும் வீணடிக்க நினைப்பவர்கள் கொண்டுவரும் எந்தவொரு கேஸும் நேசமணியிடம் எடுபடாது.

---------------

துப்பறிவாளர் நேசமணிக்கு பிடித்தவை:

கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், கலை, இலக்கியம், குற்றவியல், புலனாய்வு, துப்பறிதல், கால்பந்து மற்றும் செஸ் விளையாட்டு.


Dr சுந்தரத்துக்கு பிடித்தவை:

சிக்கன் 65, மட்டன் குருமா, பாய்கடை பிரியாணி, பனங்கள்ளு, மது, மாது, சூது.. இவை எல்லாவற்றையும் விடவும் காசு, பணம், துட்டு, மணி, மணி.. 😂😂...

---------------

துப்பறிவாளர் நேசமணி, பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பலரையும் அவற்றில் இருந்து விடுவிக்கும் துப்பறியும் தொழில் மூலம் தனக்குக் கிடைக்கும் மனத் திருப்தியையும் மன நிம்மதியையும் தனது வாழ்வின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இவர் செய்யும் சேவைக்கு போதுமானளவு பணமும் இவரது வாடிக்கையாளர்களிடம் இருந்து இவருக்கு கிடைக்கப்பெற்றது.

Dr சுந்தரம் நேசமணிக்குக் கிடைக்கும் பணத்தில் இருந்து ஓர் பெரும் பகுதியை எப்போதும் ஆட்டையை போடுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். 😂😂😂

கை நிறைய பணம், வயிறு நிறைய பிரியாணி, மது, மாது, மற்றும் யாரையாவது ஏமாற்றி எதையாவது அடைந்துகொள்ளல் போன்றவற்றில் தனது சந்தோசம் உள்ளது என Dr சுந்தரம் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார்.

எது எவ்வாறாயினும் துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் நல்ல நண்பர்கள். தனதுஅறிவுரைகளை கேட்டு Dr சுந்தரம் ஒருநாள் நிச்சயம் திருந்தி நல்வழிப்படுவார் என நேசமணி Dr சுந்தரத்தை அநியாயமாக நம்பிக் கொண்டிருந்தார்.

அதே போல் தான் அனுபவிக்கும் சுகபோக வாழ்க்கையை பார்த்து துப்பறிவாளர் நேசமணியும் ஒரு நாள் திருந்தி தன்னைப்போல் சுகபோக வாழ்வில் நுழைவார் என Dr சுந்தரமும் நம்பிக் கொண்டிருந்தார்... 😄


சரி,, வாருங்கள், துப்பறிவாளர் நேசமணி தனது சகா Dr சுந்தரத்துடன் துப்பறியும் கதைக்களுக்கு செல்லலாம்... துப்பறிவாளர் நேசமணி கதைகள்.

Copyright reserved by manavarulagam.net

(கதைகள் மிக விரைவில்)
Previous Post Next Post