2020 - இலங்கையில் நீண்ட வாராந்த விடுமுறைகளை கொண்ட ஓர் வருடம்!


உதயமாகியுள்ள 2020 வருடமானது  எமது நாட்டில் நீண்ட வராந்த விடுமுறைகளையுடைய ஓர் வருடமாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், 23 அரச விடுமுறை தினங்களை கொண்ட ஆண்டாக 2020 ஆம் ஆண்டு காணப்படுகிறது. இதில் உள்ள குறிப்பிடத்தக்க விடயம்  என்னவென்றால், இந்த 23 அரச விடுமுறை தினங்களிலும், 14 விடுமுறை தினங்கள் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை ஆகிய தினங்களில் காணப்படுவதேயாகும்.

இதனால் இவ்வருடம் அதிகளவில் நீண்ட வராந்த விடுமுறைகளையுடைய வருடமாக காணப்படுகிறது. அத்துடன், 2020 ஆண்டின் முதல் போயா விடுமுறை தினமாகிய இம்மாதத்தின் 10 ஆம் திகதியும் ஓர் வெள்ளிக்கிழமை நாள் என்பது  குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post