பட்டதாரிகள் 52,000 பேர் மார்ச் மாதத்திலும், 152,000 பேர் இவ்வருடத்திலும் அரச சேவையில் இணைக்க நடவடிக்கை!


வேலையில்லா பட்டதாரிகள் 52,000 பேருக்கு மார்ச் மாதத்தில் நியமனங்கள் வழங்கப்பட இருப்பதாக உயர்கல்வி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடம் 152,000 பேருக்கு அரச வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், உள்வாரி மற்றும் வௌிவாரி பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்க அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் ஜனாதிபதியின் எதிர்கால செயற்திட்டங்களுக்கு அமைவாகவே இந்நியமானங்கள் வழங்கப்படவுள்ளன.

சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கு ஆறு மாத கால தொழிற்பயிற்சி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிளும் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் மாவட்ட செயலகங்களினூடாக வெளியப்படப்படவுள்ளன.

ஏற்கனே நாட்டிலுள்ள 454 தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 வரை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால், சாதாரண தரம் மற்றும் உயர்தரங்களுக்கான பெருமளவில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுமிடத்து, நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், அரச நிறுவனங்களிலும் பல தொழில்வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் நிலவி வருவதால், வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலையிவைப்பினை வழங்குவதில் சிரமங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post