கொரோனா வைரஸ் - பாடசாலைகள் மூடப்படுவதில்லை!


கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் அரசாங்கத்தினால் இதுவரையில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என உயர் கல்வி அமைச்சரும், பதில் கல்வி அமைச்சருமாகிய பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்நாட்களில் பாடசாலைகளில் நடைபெற்றுவரும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு சார்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பற்றி சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் பரவி வரும் போலியான தகவல்கள் பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post