இலங்கையின் 72வது தேசிய சுதந்திர தினம் இன்று!


இந்து சமுத்திரத்தின் முத்து, பட்டுப்பாதை போக்குவரத்தின் மையப்புள்ளி, தரைத்தோற்ற அமைப்பில் விஷேட அம்சங்கள், ஆசியாவின் புதையல், நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவு, பலராலும் பல பெயர்களாலும் அழைக்கப்படும் அழகிய தீவு நாடு, இலங்கை.

இலங்கை இயற்கை அன்னையின் அருட்கொடைகளை கொண்ட ஒரு அழகிய நாடு. விவசாயமும், அழகிய விளைநிலங்களும் இதன் அடையாளம்.

காலத்தின் சாபத்தில் உள்நாட்டு யுத்தம், கலவரங்கள், அரசியல் குழப்பங்கள் என எது வந்து போனாலும், இங்கே வாழும் மக்களின் பாரம்பரியமும், விருந்தோம்பலும் என்றைக்கும் மாறியதில்லை. அழகிய குணங்களும், நல்ல உள்ளங்களும் நாட்டின் பொக்கிஷங்களான அழகிய கிராமங்களில் இன, மத பேதங்களை கடந்து இன்னும் உயிர்வாழ்கின்றன.


இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறுகின்றன.

இது தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது சுதந்திர தின நிகழ்வாகும். பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் இம்முறை சுதந்திர சதுக்கத்தில் தேசிய சுதந்திர தின விழா நடைபெறுகிறது

கி.பி 1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரினால் இலங்கையின் கரையோர பிரதேசம் கைப்பற்றப்பட்டது. கி.பி 1602 இல் மீண்டும் ஒல்லாந்தரினால் இலங்கை கைப்பற்றப்பட்டது. கி.பி 1766 ஆம் ஆண்டளவில் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் இலங்கையின் மலையக பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. எனினும் 1815 இல் மலையக மக்களின் அதிகாரக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட பிளவு காரணமாக பிரித்தானியாவினால் மலையகத்தை இலகுவாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர் முழு இங்கையும் ஆங்கிலேயரின் நிர்வாக கட்டமைக்குள் உள்வாங்கப்பட்டது.

இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக வெளிநாட்டவர்கள் இலங்கையை அக்கிரமித்தாலும், பல கிளர்ச்சிகள் மற்றும் மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் மூலம் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை மண்ணுக்கு சுதந்திரம் கிடைத்தது.

சுதந்திர இலங்கையில் கடந்த 72 வருட காலப்பகுதியில் 1948 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு ரத்து செய்யப்பட்ட பின்னர் முக்கிய இரு அரசியல் யாப்புகள் மூலம் நாடு செயற்பட ஆரம்பித்தது. இவை 1972 இல் நிவைவேற்றப்பட்ட மக்கள் குடியரசு யாப்பும், அதனை தொடர்ந்து 1978 இல் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பு அமைப்புமாகும்.
Previous Post Next Post