இன்று பட்டதாரி நியமன கடிதங்கள் அனுப்பப்படும்!


வேலையற்ற பட்டதாரிகளை அரச நிறுவங்களின் பயிலுனர்களாக இணைந்துகொள்வதற்கான நியமனக் கடிதங்கள் இன்று தபாலில் அனுப்பப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நியமங்களில் 80 வீதமானவை பாடசாலை ஆசிரியர் நியமனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 50,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்னப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், சுமார் 40,000 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நியமானகள் தொடர்பான பணிகள் ஜனாதிபதி செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டு செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post