பாகுபாடின்றி அனைத்து பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் வேலைவாய்ப்பு!


இவ்வருடத்தில் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துளளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன, ராஜகிரிய பகுயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வேலையில்லா பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், பட்டதாரிகளுக்கான இவ்வேலைவாய்ப்புக்கள் எந்தவித கட்சி மற்றும் அரசியல் பாகுபாடுகளுமின்றி வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post