தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு 2 மாத தலைமைத்துவ பயிற்சி!


வேலையில்லா பட்டதாரிகளை பயிலுனர்களாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் செயற்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 45,585 பட்டதாரிகளுக்குமான நியமனக் கடிதங்கள் அரச பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நியமனம் பெறும் பட்டதாரிகள் அனைவரும் ஒரு வருட பயிற்சிக்காலத்துக்கு உள்வாங்கப்படுவதுடன், தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் 2 மாத தலைமைத்துவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும்.

Source - News.lk
Previous Post Next Post