Lesson 06 | Proper Nouns - உரித்தான பெயர்ச்சொற்கள்


Proper Nouns
உரித்தான பெயர்ச்சொற்கள்

உங்கள் பெயர் ஓர் உரித்தான பெயர்ச்சொல்லாகும். காரணம், உங்கள் பெயரால் குறிப்பிடப்படும் நபர் நீங்கள் மட்டுமே. குறித்த பெயரில் வேறு நபர்கள் இருந்தாலும், உங்களை மட்டும் தனியே குறிப்பிட அந்த பெயர் பயன்படும் போது அது உங்களுக்கு உரித்தான பெயராகும்.

இதே போன்று ஒரு பெயரால் குறிப்பிட்டுக் கூறப்படும் உயிரினங்களின் பெயர்கள், நாடுகளின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், மதங்களின் பெயர்கள் போன்றவை உரித்தான பெயர்ச்சொற்களாகும்.

-----------
(ஏற்கனே ஓரளவு ஆங்கிலத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் உற்பட ஆரம்பத்தில் இருந்தே ஆங்கிலம் கற்க விரும்புகின்றவர்களும், இலகுவில் விளங்கிக்கொள்ளும் அளவிற்கு இலகு மொழிநடையில், சிறு பாடங்களாக, சிறு கட்டுரை வடிவில் இங்கே விளக்கங்கள் தரப்படுகின்றன).
-----------

மேலும் கூறுவதென்றால், உரித்தான பெயர்ச்சொற்கள் (Proper Nouns) எண்ணிக்கையில் ஒன்று மட்டுமே இருக்கும்.

இதை பின்னவரும் உதாரணங்கள் மூலம் உங்களுக்கு தெளிவுபடுத்த முடியும்.

உதாரணங்கள் (Examples):

01. Human - மனிதன் என்பது ஒரு  பொதுவான பெயர்ச்சொல் (Common Noun) ஆகும். ஆனால்,

Vimal - விமல்.
Kumar - குமார்.
Saleem - சலீம்.
Rohini - ரோஹிணி
Surya - சூர்யா.

என்பவை குறித்த ஒருவரை குறிப்பிடப் பயன்படும் உரித்தான பெயர்ச்சொற்களாகும் (Proper Nouns).

02. Dog - நாய் என்பது ஒரு  பொதுவான பெயர்ச்சொல் (Common Noun) ஆகும். எனினும் சிலர் செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய்க்கு Jimmy - ஜிம்மி என்று பெயர் சூட்டுவார்கள். இங்கே Jimmy - ஜிம்மி என்பது ஓர் உரித்தான பெயர்ச்சொல்லாகும் (Proper Noun).

03. Language - மொழி என்பது ஒரு  பொதுவான பெயர்ச்சொல் (Common Noun) ஆகும். ஆனால்,

Tamil - தமிழ்
English - ஆங்கிலம்
Hindi - ஹிந்தி
Arabic - அரபு
Latin - லத்தீன்

என்பவை உரித்தான பெயர்ச்சொற்களாகும் (Proper Nouns).

04. Country - நாடு என்பது ஒரு  பொதுவான பெயர்ச்சொல் (Common Noun) ஆகும். ஆனால்,

India - இந்தியா
Sri Lanka - இலங்கை
Qatar - கட்டார்.
Germany - ஜெர்மனி
Australia - அவுஸ்திரேலியா.

என்பவை உரித்தான பெயர்ச்சொற்களாகும் (Proper Nouns).

05. Place - இடம் என்பது ஒரு  பொதுவான பெயர்ச்சொல் (Common Noun) ஆகும். ஆனால்,

Chennai - சென்னை
Colombo - கொழும்பு
New Delhi - புது டில்லி
Jaffna - யாழ்ப்பாணம்
London - லண்டன்
Paris - பரிஸ்

என்பவை உரித்தான பெயர்ச்சொற்களாகும் (Proper Nouns).

06. Religion - மதம் என்பது ஒரு  பொதுவான பெயர்ச்சொல் (Common Noun) ஆகும். ஆனால்,

Christianity - கிறிஸ்தவ மதம்.
Islam - இஸ்லாம் மதம்.
Hinduism - இந்து மதம்.
Buddhism - புத்த மதம்.
Judaism - யூத மதம்

இதேபோல் Ocean - சமுத்திரம் என்பது ஒரு  பொதுவான பெயர்ச்சொல் (Common Noun) ஆகும், ஆனால் Indian Ocean - இந்து சமுத்திரம் என்பது ஓர் உரித்தான பெயர்ச்சொல் ஆகும்.

குறிப்பு: உரித்தான பெயர்சொற்களின் (Proper Nouns) முதல் எழுத்து ஆங்கிலத்தில் கட்டாயமாக கேப்பிடல் எழுத்தில் (Capital Letter) எழுதப்பட வேண்டும். மேலும் இவற்றினை குறிப்பிட்டும் போது a, an என்பவற்றுக்கு பதிலாக the சேர்த்து எழுதப்படல் வேண்டும். இவை பற்றி தொடர்ந்து வரும் பாடங்களில் விரிவாகப் பார்க்கலாம்.

தொடர்பான பகுதி: Nouns - பெயர்ச்சொற்கள்
أحدث أقدم