அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 15 | English Words in Tamil


ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மிக முக்கியமாக சொற்கள் (Words) தேவைப்படுகின்றன. ஆங்கிலத்தில் 100 சொற்கள் தெரிந்தவரை விட 1000 சொற்கள் தெரிந்தவர் இன்னும் இலகுவாக மற்றும் விபரமாக உரையாட முடியும்.

எனவே ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள், முடியுமான வரை ஆங்கில சொற்களை தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

ஆகவே தான் 'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் இந்த பகுதியினூடாக தினமும் நாம் உங்களுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான சொற்களை அவற்றின் தமிழ் விளக்கத்துடன் பதிவிடுகிறோம். உங்கள் வசதிக்கேற்ப இவற்றை நீங்கள் ஒவ்வொரு பகுதியாக கற்றுவரலாம்.

புதிய சொற்களை அறிந்துகொள்ள தினமும் ஆங்கிலத்தில் ஒரு பந்தியையேனும், குறைந்தபட்சம் ஒரு வாக்கியத்தையேனும் வாசிப்பதை பழக்கத்தில் கொள்ளுங்கள்.

இணையத்திலோ அல்லது பத்திரிகையிலோ ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள உள்ள எதாவது ஒரு பந்தியை வாசித்து, கீழே உள்ள சொற்களில் எதாவது அங்கே உள்ளனவா என கண்டுபிடிக்க முயற்சியுங்கள். இதனால் நீங்கள் ஆங்கிலத்தில் தெரிந்துவைத்திருக்கும் சொற்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

compare - ஒப்பிடுதல்
concern - அக்கறை
condition - நிலை / நிபந்தனை
college - கல்லூரி
claim - உரிமைகோரல்
control - கட்டுப்பாடு
couple - ஜோடி
consumer - நுகர்வோர்
contain - கொண்டிருக்கும்
continue - தொடரும்
cold - குளிர் / சளி
collection - சேகரிப்பு
common - பொதுவான
community - சமுதாயம்
cost - விலை / செலவு
commercial - வணிகரீதியான
clear - தெளிவான
close - நெருக்கமாக / அடைக்கப்பட்ட
coach - பயிற்சியாளர்
company - நிறுவனம்
conference - மாநாடு
consider - கருத்தில் கொள்ளதல்

இது போன்ற மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.
Previous Post Next Post