ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 10) | 'I don't know (எனக்குத் தெரியாது)' என்பதை 10 வேறு வழிகளில் கூறும் முறை.


ஆங்கிலத்தில் பேசும் போது 'I don't know (எனக்குத் தெரியாது)' என்பதை 10 வேறு வழிகளில் கூறும் முறை.

முக்கிய குறிப்பு: கீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும். 

இவை அனைத்தையும் நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் போது I don't know (எனக்குத் தெரியாது) என்பதற்கு பதிலாக முயற்சித்துப் பார்க்கலாம்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.I’m not sure.
என்னால் உறுதியாக கூற முடியாது.

I have no clue.
என்னிடம் அதை பற்றி எந்த துப்பும் இல்லை.

It’s a mystery to me.
அது எனக்கு ஒரு மர்மமாக உள்ளது.

I’m not 100% sure on that.
எனக்கு உறுதியில்லை.

I have no idea.
என்னிடம் அது பற்றி எந்த யோசனையும் இல்லை.

I haven’t looked at that yet.
அதை பற்றி நான் இன்னும் பார்கவில்லை.

Let me check on that.
அதைப் பற்றி ஆராய்கிறேன்.

Let me find out for you.
உங்களுக்காக அதை பற்றி தேடிப் பார்கிறேன்.

How should I know?
எனக்கு எப்படித் தெரியும்.

I’ll get back to you on that one.
அதைப் பற்றி ஆராய்ந்து விட்டு மீண்டும் உங்களிடம் வருகிறேன்.
Previous Post Next Post