ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 24

'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.We like to take bath in the river.
நாங்கள் ஆற்றில் குளிக்க விரும்புகிறோம்.

He does homework regularly.
அவன் தவறாமல் வீட்டுவேலை செய்கிறான்.

She plays basketball.
அவள் கூடைப் பந்து விளையாடுகிறாள்.

Kids like to eat chocolate.
சிறுவர்கள் சாக்லேட் சாப்பிட விரும்புகின்றனர்.

She wakes up early in the morning.
அவள் அதிகாலையில் விழித்தெழுகிறாள்.

We speak Tamil every day.
நாங்கள் தினமும் தமிழ் பேசுகிறோம்.

My parents live in Melbourne.
எனது பெற்றோர்கள் மெல்போர்னில் வசிக்கின்றனர்.

They go to movie once in a week.
அவர்கள் வாரத்திற்கு ஒருமுறை படம் பார்க்க செல்கின்றனர்.

She loves to play tennis.
அவள் டென்னிஸ் விளையாட விரும்புகிறாள்.

It rains here every month.
இங்கே ஒவ்வொரு மாதமும் மழை பெய்கிறது.
Previous Post Next Post