ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 26


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

வைத்தியரை சந்திக்க சென்றால் உங்கள் நோய் நிலமையை விபரிக்க உதவும் ஆங்கில வாக்கியங்களும், சொற்றொடர்களும் (பகுதி 1)

Talking to a Doctor in English (Part 1)

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.I feel unwell.
எனக்கு உடல்நிலை சரியில்லை.

I have a headache.
எனக்கு தலைவலி உள்ளது.

I am having fever for two days.
எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் உள்ளது.

I have got a sore throat.
எனக்கு தொண்டை வலி உள்ளது.

My right arm is sore.
எனது வலது கை வலிக்கிறது.

Painful swelling in the left knee.
இடது முழங்காலில் வலியுடன் கூடிய வீக்கம்.

My eyes are bloodshot.
எனது கண்கள் சிவந்துள்ளன.

I have a dry cough.
எனக்கு ஒரு வறண்ட இருமல் உள்ளது.

My legs feel weak.
எனது கால்கள் வலுவற்றுள்ளன.

My mouth is dry.
எனது வாய் வறண்டு போயுள்ள்ளது.

I have a hip pain.
எனக்கு இடுப்பு வலி உள்ளது.

Pain in right ankle.
கணுக்காலில் வலி.

I couldn't sleep well.
என்னால் சரியாக உறங்க முடியவில்லை.

மேலே தரப்பட்டுள்ள சில வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் வேறுபடும் எனினும், அவற்றினால் வெளிப்படும் கருத்து மேலே தரப்பட்டுள்ளவாறே அமையும் அமையப்பெறும்.
Previous Post Next Post