ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 30


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே ஒரு விடயத்தில் உடன்படுவதை ஆங்கிலத்தில் கூறும் சில சொற்றொடர்களையும், வாக்கியங்களையும் பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.I had that same idea.
எனக்கும் அதே யோசனை இருந்தது.

That’s exactly how I feel.
நானும் அப்படியே தான் உணர்கிறேன்.

That’s just what I was thinking.
நானும் அதைத் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

I guess so.
நான் அப்படி யூகிக்கிறேன்.

Of course.
நிச்சயமாக.

That’s exactly what I was thinking.
நானும் அதை அப்படியே தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

Absolutely!
முற்றிலும் (சரி).

You’re absolutely right.
நீங்கள் முற்றிலும் சரி.

Exactly!
மிகவும் சரியாக (கூறினீர்கள்)

I think you are totally right about that.
நான் நினைக்கிறேன் நீங்கள் அதில் முற்றிலும் சரியாக உள்ளீர்கள்.

That’s right.
அது சரி.
Previous Post Next Post