ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 36 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியூடாக தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ள முடியும்.


Long time no see!
நெடு நாட்களாக பார்க்க வில்லை!

That’s a great idea!
அது ஒரு சிறந்த யோசனை!

I got a new job.
எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்தது.

Just look at those kids!
அந்தக் குழந்தைகளை கொஞ்சம் பாருங்கள்!

I haven't seen you in ages!
நான் உங்களை யுகங்களாக (நெடுங்காலமாக) பார்த்ததில்லை!

What can I do for you?
நான் உங்களுக்காக என்ன செய்ய முடியும்?

How can I help you?
நான் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?Do you need anything else?
உங்களுக்கு வேறு ஏதேனும் தேவைப்படுகிறதா?

Shall we go inside?
நாங்கள் உள்ளே போகலாமா?

Could you tell me where the shop is?
கடை எங்கே என்று (உங்களால் எனக்கு) சொல்ல முடியுமா?

I know how you feel.
நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

What did they say?
அவர்கள் என்ன கூறினார்கள்?

I almost forgot it.
நான் கிட்டத்தட்ட அதை மறந்தே போய்விட்டேன்.

You have to be very careful.
நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Previous Post Next Post