ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 37 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே வங்கியுடன் தொடர்புடைய சூழலில் பயன்படுத்தக்கூடிய சில வாக்கியங்களும் சொற்றொடர்களும் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியூடாக தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ள முடியும்.


I want to deposit some money.
எனக்கு கொஞ்சம் பணம் வைப்பு செய்ய வேண்டும்.

I want to withdraw some money.
எனக்கு கொஞ்சம் பணம் மீளப்பெற வேண்டும்.

Please, fill a deposit slip.
தயவுசெய்து, ஒரு வைப்பு சீட்டை நிரப்பவும்.

Please, fill a withdrawal slip.
தயவுசெய்து, ஒரு மீளப்பெறும் சீட்டை நிரப்பவும்.

Where are the deposit slips?
வைப்பு சீட்டுகள் எங்கே உள்ளன?

How much money do you want to deposit?
எவ்வளவு பணம் வைப்பு செய்ய விரும்புகிறீர்கள்?

I want to open an account.
நான் ஒரு கணக்கை திறக்க விரும்புகிறேன்.

What kind of an account do you want to open?
நீங்கள் எவ்வகையான கணக்கை திறக்க விரும்புகிறீர்கள்?

I want to see your bank manager.
நான் உங்கள் வங்கி மேலாளரைப் பார்க்க விரும்புகிறேன்.


Come with me, I will take you to the bank manager.
என்னுடன் வாருங்கள், நான் உங்களை வங்கி மேலாளரிடம் அழைத்து செல்கிறேன்.

I want to check my account balance.
நான் எனது கணக்கு நிலுவையை அறிய விரும்புகிறேன்.

How much money is there in my account?
எனது கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது?

There are 100,000 rupees in you account.
உங்கள் கணக்கில் 100,000 ரூபாய்கள் உள்ளன.

There is no money in your account.
உங்கள் கணக்கில் பணம் எதுவும் இல்லை.

Your account is closed.
உங்கள் கணக்கு மூடப்பட்டுள்ளது.

I want to close my account.
எனது கணக்கை மூடி விட விரும்புகிறேன்

Can I have an ATM card for my account?
எனது கணக்கிற்கு ஒரு ஏ.டி.எம் அட்டை பெற்றுக்கொள்ள முடியுமா?

Do you have internet banking facility?
உங்களிடம் இணைய வழி வங்கிச் சேவை உள்ளதா?

I want to apply for internet banking.
நான் இணைய வழி வங்கிச் சேவைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன்.


Bank account.
வங்கிக் கணக்கு.

Bank loan.
வங்கிக் கடன்.

Cash counter.
பணம் செலுத்தும், வாங்கும் இடம்.

Teller.
வங்கியில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவர்

Cashier.
காசாளர்.

Savings account.
சேமிப்புக் கணக்கு.

Current account.
நடைமுறைக் கணக்கு.

Fixed deposit.
நிலையான வைப்பு.
Previous Post Next Post