ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 39 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

வைத்தியரை சந்திக்க சென்றால் உங்கள் நோய் நிலமையை விபரிக்க உதவும் ஆங்கில வாக்கியங்களும், சொற்றொடர்களும் (பகுதி 2)

Talking to a Doctor in English (Part 2)

இங்கே நீங்கள் வைத்தியரை சந்திக்க சென்றால், வைத்தியர் உங்களிடம் அணுகும் முறையிலான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


What’s wrong?
என்ன பிரச்சினை?

What’s the matter?
என்ன விஷயம்?

Where does it hurt?
எங்கே வலிக்கிறது?

Please take a seat.
தயவுசெய்து, அமருங்கள்.

Can you feel my hand?
என் கையை உங்களால் உணர முடிகிறதா?

Do you have any allergies?
உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருக்கிறதா?

Can you raise your hands?
உங்கள் கைகளை உயர்த்த முடியுமா?

Are you currently taking any medicine?
நீங்கள் தற்போது ஏதாவது மருந்து உபயோகிக்கிறீர்களா?

Are you allergic to any medicine?
ஏதேனும் மருந்துக்கு உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறதா?

Have you seen a doctor for this before?
இந்தப் பிரச்சினைக்காக இதற்கு முன்னர் ஒரு மருத்துவரை சந்தித்ததுண்டா?Have you been treated for this problem before?
இந்தப் பிரச்சினைக்கு இதற்கு முன்பு நீங்கள் சிகிச்சை பெற்றிருக்கிறீர்களா?

Do you have any difficulty sleeping?
உங்களுக்கு தூங்குவதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா?

Do you have any difficulty eating?
உங்களுக்கு சாப்பிடுவதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா?

When did you last visit your doctor?
கடைசியாக நீங்கள் உங்கள் மருத்துவரை எப்போது சந்தித்தீர்கள்?

Do you smoke?
நீங்கள் புகைபிடிக்கிறீர்களா?

Do you drink?
நீங்கள் மது அருந்துகிறீர்களா?

Do you have any other problems?
உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா?
Previous Post Next Post