ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 42 | ஆங்கிலம் கற்போம்


ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் உங்களால் இயன்ற அளவில் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும். 

உங்களுக்கு ஆங்கிலத்தில் இலகுவாக வாசிக்கவும், எழுதவும் முடியுமெனினும், கதைப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும். நீங்கள் எந்தளவிற்கு ஆங்கிலத்தில் கதைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் ஆங்கிலம் பேசும் திறன் விருத்தியடையும். இதற்காக நீங்கள் தினமும் சற்று நேரத்தை ஒதுக்கி பயிற்சியில் ஈடுபலாம். வெளிநாடுகளில் ஆங்கிலம் கதைக்கக் கூடிய சூழலில் இருப்பவர்களும் இலகுவாக இதனை பயிற்சியில் கொண்டுவரலாம்.

"ஆங்கிலத்தில் பேசுவோம்" எனும் பகுதியூடாக தினமும் ஆங்கிலத்தில் பேச உதவும் சில வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

கீழே உள்ள சில வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Did you notice that?
நீங்கள் அதை கவனித்தீர்களா?

You didn't notice that.
நீங்கள் அதை கவனிக்கவில்லை.

Didn't you notice that?
நீங்கள் அதை கவனிக்கவில்லையா?

Please, send it to me.
தயவுசெய்து, அதை எனக்கு அனுப்புங்கள்.

Please, don't send it to me.
தயவுசெய்து, அதை எனக்கு அனுப்ப வேண்டாம்

There appears to be a problem.
ஒரு சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.

Come close to me.
என் அருகில் வாருங்கள்.

Don't come close to me.
என் அருகில் வர வேண்டாம்.

Please, go away.
தயவு செய்து போய்விடுங்கள்.

Please, don't go away.
தயவுசெய்து, போய்விட வேண்டாம்.


Be safe.
பாதுக்காப்பாக இருங்கள்.

Keep your family safe
உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

That is true.
அது உண்மை.

Is that true?
அது உண்மையா?

That is not true.
அது உண்மை அல்ல.

Isn't that true?
அது உண்மையல்லவா?
Previous Post Next Post