ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 43 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான 20 வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியூடாக தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


They watched movie.
அவர்கள் படம் பார்த்தார்கள்.

Did they watch movie?
அவர்கள் படம் பார்த்தார்களா?

They didn't watch movie.
அவர்கள் படம் பார்க்கவில்லை.

Didn't they watch movie?
அவர்கள் படம் பார்க்கவில்லையா?

They went inside.
அவர்கள் உள்ளே சென்றார்கள்.

Did they go inside?
அவர்கள் உள்ளே சென்றார்களா?

They didn't go inside.
அவர்கள் உள்ளே செல்லவில்லை.

Didn't they go inside?
அவர்கள் உள்ளே செல்லவில்லையா?

He introduced himself.
அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

Did he introduce himself?
அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாரா?

He didn't introduce himself.
அவர் தன்னை அறிமுகப்படுத்தவில்லை.

Didn't he introduce himself?
அவர் தன்னை அறிமுகப்படுத்தவில்லையா?


The baby crawls slowly.
குழந்தை மெதுவாக தவழ்கிறது.

Does the baby crawl slowly?
குழந்தை மெதுவாக தவழ்கிறதா?

The baby doesn't crawl slowly.
குழந்தை மெதுவாக தவழ்வதில்லை.

Doesn't the baby crawl slowly?
குழந்தை மெதுவாக தவழ்வதில்லையா?

They walked to the car.
அவர்கள் காரை நோக்கி நடந்தார்கள்.

Did they walk to the car?
அவர்கள் காரை நோக்கி நடந்தார்களா?

They didn't walk to the car.
அவர்கள் காரை நோக்கி நடக்கவில்லை.

Didn't they walk to the car?
அவர்கள் காரை நோக்கி நடக்கவில்லையா?
Previous Post Next Post