ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 45 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியூடாக தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும். 


I can't explain them.
என்னால் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது.

They don't understand.
அவர்களுக்கு புரிவதில்லை.

You have to tell them.
நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டி உள்ளது.

They won't do that.
அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.

Can you go there?
நீங்கள் அங்கு செல்ல முடியுமா?

I can't go there.
என்னால் அங்கு செல்ல முடியாது.

They won't come here.
அவர்கள் இங்கு வரமாட்டார்கள்.

Don't wait for them.
அவர்களுக்காக காத்திருக்க வேண்டாம்.

I don't have time for that.
அதற்கு எனக்கு நேரம் இல்லை.


Bring my laptop.
எனது மடிக்கணினியை கொண்டு வாருங்கள்.

I can't bring what you want.
உங்களுக்கு வேண்டியதை என்னால் கொண்டு வர முடியாது.

Please consider my request.
எனது வேண்டுகோளை கருத்திற் கொள்ளுங்கள்.

I don't care about that.
நான் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

They don't listen to us.
அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை.
Previous Post Next Post