ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 46 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஒரு நாளில் சிறிது நேரம் ஒதுக்கி ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு தயக்கம் உடையவரெனின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்துப் பார்க்கலாம். நீங்கள் அதற்காக 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியூடாக தரப்படும் வாக்கியங்களையும் முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும். 

ஆங்கிலம் கற்போம் முகநூல் குழுமத்தில் உள்ள பலரினதும் வேண்டுகோளை தொடர்ந்து இங்கே ஆங்கில வாக்கியங்களின் உச்சரிப்பும் தமிழில் தரப்பட்டுள்ளது.


They have to go to work.
அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது.

Do they have to go to work?
அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளதா?

They don't have to go to work.
அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை.

Don't they have to go to work?
அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதில்லையா?

She has to come early.
அவள் நேரகாலத்துடன் வர வேண்டி உள்ளது.

Does she have to come early?
அவள் நேரகாலத்துடன் வர வேண்டி உள்ளதா?

She doesn't have to come early.
அவள் நேரகாலத்துடன் வர வேண்டியதில்லை.


Doesn't she have to come early?
அவள் நேரகாலத்துடன் வர வேண்டியதில்லையா?

He comes late.
அவர் தாமதமாக வருகிறார்.

Does he come late?
அவர் தாமதமாக வருகிறாரா?

He doesn't come late.
அவர் தாமதமாக வருவதில்லை.

Doesn't he come late?
அவர் தாமதமாக வருவதில்லையா?
Previous Post Next Post