ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 51


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

நவீன உலகில் காலடி எடுத்துவைக்கும் அனைவருக்கும் ஆங்கில அறிவு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக நவீன தொழிநுட்பதின் வளர்ச்சியில் உருவாகும் இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தும் போது, அவற்றை இயக்க ஓரளவேனும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். நவீன உலகில் நீங்கள் எதாவது ஒரு துறையில் முன்னேறி செல்ல வேண்டுமென்றால் கணினி அறிவும் ஆங்கில அறிவும் மிகவும் முக்கியமானதாகும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் மற்றும் ஆங்கில சொற்றொடர்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


We work on Sundays.
நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறோம்.
Do we work on Sundays?
நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறோமா?
We don't work on Sundays.
நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்யவதில்லை.
Don't we work on Sundays?
நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்யவதில்லையா?

It is difficult to find a job.
தொழிலொன்றை தேடுவது கடினமானது.
Is it difficult to find a job?
தொழிலொன்றை தேடுவது கடினமானதா?
It is not difficult to find a job.
தொழிலொன்றை தேடுவது கடினமானதல்ல.
Isn't it difficult to find a job?
தொழிலொன்றை தேடுவது கடினமானதல்லவா?

Email marketing.
மின்னஞ்சல் சந்தைப்படுத்தல்
Digital marketing.
டிஜிட்டல் சந்தைப்படுத்தல்.
Social media marketing.
சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல்.


Step in.
உள்ளே வாருங்கள்.
Don't step in.
உள்ளே காலடியெடுத்து வைக்க வேண்டாம்.
Did you step in?
நீங்கள் உள்ளே காலடியெடுத்து வைத்தீர்களா?
You should not step in.
நீங்கள் உள்ளே காலடியெடுத்து வைக்கக்கூடாது.

We should work hard.
நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
Should we work hard?
நாம் கடினமாக உழைக்க வேண்டுமா?
We shouldn't work hard.
நாம் கடினமாக உழைக்கக்கூடாது.
Shouldn't we work hard?
நாம் கடினமாக உழைக்க வேண்டாமா?
Previous Post Next Post