ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 53


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இலகுவாக்கும் நோக்கில் இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பட பயன்படுத்த முடியும்.

இங்கே அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் மற்றும் ஆங்கில சொற்றொடர்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


He can clean the house.
அவனால் வீட்டை சுத்தம் செய்ய முடியும்.
Can you clean the house?
உங்களால் வீட்டை சுத்தம் செய்ய முடியுமா?
He can't clean the house.
அவனால் வீட்டை சுத்தம் செய்ய முடியாது.
Can't you clean the house?
உங்களால் வீட்டை சுத்தம் செய்ய முடியாதா?

That is clear.
அது தெளிவாக உள்ளது.
Is that clear?
அது தெளிவாக உள்ளதா?
That is not clear.
அது தெளிவாக இல்லை.
Isn't that clear?
அது தெளிவாக இல்லையா?

This place attracts people.
இந்த இடம் மக்களை ஈர்க்கிறது.
Does this place attract people?
இந்த இடம் மக்களை ஈர்க்கிறதா?
This place doesn't attract people.
இந்த இடம் மக்களை ஈர்ப்பதில்லை.
Doesn't this place attract people?
இந்த இடம் மக்களை ஈர்ப்பதில்லையா?


It is an interesting story.
அது ஒரு சுவாரஸ்யமான கதை.
Is it an interesting story?
அது ஒரு சுவாரஸ்யமான கதையா?
It is not an interesting story.
அது ஒரு சுவாரஸ்யமான கதையல்ல.
Isn't it an interesting story?
அது ஒரு சுவாரஸ்யமான கதையல்லவா?

Don't listen to others.
மற்றவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம்.
Keep moving forward.
முன்னோக்கிச் சென்றுகொண்டே இருங்கள்.
It is a fantastic place.
அது ஒரு அருமையான இடம்.

He is the right person to do this job.
இந்த வேலையைச் செய்ய அவர் தான் சரியான நபர்.
Is he the right person to do this job?
இந்த வேலையைச் செய்ய அவர் சரியான நபரா?
He is not the right person to do this job.
இந்த வேலையைச் செய்ய அவர் சரியான நபர் அல்ல.
Isn't he the right person to do this job?
இந்த வேலையைச் செய்ய அவர் சரியான நபர் இல்லையா?
Previous Post Next Post