ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 59


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்களுக்கு உதவும் நோக்கில் இங்கே ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த முடியும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


You were sleeping.
நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்.
Was I sleeping?
நான் தூங்கிக் கொண்டிருந்தேனா?
You were not sleeping.
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கவில்லை.
Wasn't I sleeping?
நான் தூங்கிக் கொண்டிருக்கவில்லையா?

I will come late.
நான் தாமதமாக வருவேன்.
Will you come late?
நீங்கள் தாமதமாக வருவீர்களா?
I will not come late.
நான் தாமதமாக வரமாட்டேன்.
Won't you come late?
நீங்கள் தாமதமாக வரமாட்டீர்களா?

I can wait for you.
என்னால் உங்களுக்காக காத்திருக்க முடியும்.
Can you wait for me?
உங்களால் எனக்காக காத்திருக்க முடியுமா?
I can't wait for you.
என்னால் உங்களுக்காக காத்திருக்க முடியாது.
Can't you wait for me?
உங்களால் எனக்காக காத்திருக்க முடியாதா?


I can move a bit.
என்னால் சற்று நகர முடியும்.
Can you move a bit?
உங்களால் சற்று நகர முடியுமா?
I can't move.
என்னால் நகர முடியாது.
Can't you move a bit?
உங்களால் சற்று நகர முடியாதா?

He will work at night.
அவன் இரவில் வேலை செய்வான்.
Will he work at night?
அவன் இரவில் வேலை செய்வானா?
He will not work at night.
அவன் இரவில் வேலை செய்ய மாட்டான்.
Won't he work at night?
அவன் இரவில் வேலை செய்ய மாட்டானா?

I can talk to him.
என்னால் அவருடன் பேச முடியும்.
Can you talk to him?
உங்களால் அவருடன் பேச முடியுமா?
I can't talk to him.
என்னால் அவருடன் பேச முடியாது.
Can't you talk to him?
உங்களால் அவருடன் பேச முடியாதா?
Previous Post Next Post