ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 62


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் தினமும் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுக்க வேண்டும். அதற்காக இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


This is an online degree course.
இது ஒரு ஆன்லைன் பட்டப்படிப்பு கற்கைநெறி.

Is this an online course?
இது ஒரு ஆன்லைன் கற்கைநெறியா?

This is not an online course.
இது ஒரு ஆன்லைன் கற்கைநெறியல்ல.

Isn't this an online course?
இது ஒரு ஆன்லைன் கற்கைநெறியல்லவா?

It is a big thing.
அது ஒரு பெரிய விடயம்.

Is it a big thing?
அது ஒரு பெரிய விடயமா?

It is not a big thing.
அது ஒரு பெரிய விடயமல்ல.

Isn't it a big thing?
அது ஒரு பெரிய விடயமல்லவா?

This is a treatment.
இது ஒரு சிகிச்சை.

Is this a treatment?
இது ஒரு சிகிச்சையா?

This is not a treatment.
இது ஒரு சிகிச்சையல்ல

Isn't this a treatment?
இது ஒரு சிகிச்சையல்லவா?


He works in my office.
அவர் எனது அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

Does he work in your office?
அவர் உங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறாரா?

He doesn't work in my office.
அவர் எனது அலுவலகத்தில் வேலை செய்வதில்லை.

Doesn't he work in your office?
அவர் உங்கள் அலுவலகத்தில் வேலை செய்வதில்லையா?

I can claim my insurance.
என்னால் எனது காப்பீட்டை கோர முடியும்.

Can you claim your insurance?
உங்களால் உங்கள் காப்பீட்டைக் கோர முடியுமா?

You can't claim your insurance.
உங்களால் உங்கள் காப்பீட்டை கோர முடியாது.

Can't you claim your insurance?
உங்களால் உங்கள் காப்பீட்டை கோர முடியாதா?

I have to go now.
நான் இப்போது செல்ல வேண்டி உள்ளது.

Do you have to go now?
நீங்கள் இப்போது செல்ல வேண்டி உள்ளதா?

I don't have to go now.
நான் இப்போது செல்ல வேண்டியதில்லை.

Don't you have to go now?
நீங்கள் இப்போது செல்ல வேண்டியதில்லையா?
Previous Post Next Post