ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 64


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் பேச பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். ஆங்கிலத்தில் பேச பயிற்சி செய்யும் நேரத்தை பொருத்து, விரைவாக உங்களாலும் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


I have my own vehicle.
என்னிடம் சொந்த வாகனம் உள்ளது.

Do you have your own vehicle?
உங்களிடம் சொந்த வாகனம் இருக்கிறதா?

I don't have my own vehicle.
என்னிடம் சொந்த வாகனம் இல்லை.

Don't you have your own vehicle? 
உங்களிடம் சொந்த வாகனம் இல்லையா?

He knows what it is.
அது என்னவென்று அவருக்குத் தெரியும்.

Do you know what it is?
அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

He doesn't know what it is.
அது என்னவென்று அவருக்குத் தெரியாது.

Don't you know what it is?
அது என்னவென்று உங்களுக்குத் தெரியாதா?

This works.
இது வேலை செய்கிறது.

Does this work?
இது வேலை செய்கிறதா?

This doesn't work.
இது வேலை செய்வதில்லை.

Doesn't this work?
இது வேலை செய்வதில்லையா?


They can take it out.
அவர்களால் அதை வெளியே எடுக்க முடியும்.

Can they take it out?
அவர்களால் அதை வெளியே எடுக்க முடியுமா?

They can't take it out.
அவர்களால் அதை வெளியே எடுக்க முடியாது.

Can't they take it out?
அவர்களால் அதை வெளியே எடுக்க முடியாதா?

I will dedicate anything for you.
நான் உங்களுக்காக எதையும் தியாகம் செய்வேன்.

Will you dedicate anything for me?
நீங்கள் எனக்காக எதையும் தியாகம் செய்வீர்களா?

I won't dedicate anything for you.
நான் உங்களுக்காக எதையும் தியாகம் செய்ய மாட்டேன்.

Won't you dedicate anything for me?
நீங்கள் எனக்காக எதையும் தியாகம் செய்ய மாட்டீர்களா?
Previous Post Next Post