ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 69


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இலகுவாக்கும் நோக்கில் இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பட பயன்படுத்த முடியும்.

இங்கே அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Someone has taken my chair.
யாரோ என் கதிரையை எடுத்துள்ளார்கள்.

Did anyone of you take my chair?
உங்களில் யாராவது எனது கதிரையை எடுத்தீர்களா?

Nobody took your chair.
உங்கள் கதிரையை யாரும் எடுக்கவில்லை.

Didn't you take my chair?
நீங்கள் எனது கதிரையை எடுக்கவில்லையா?

Why did you take my chair?
ஏன் நீங்கள் எனது கதிரையை எடுத்தீர்கள்?

I didn't take your chair.
நான் உங்கள் கதிரையை எடுக்கவில்லை.

Do you work?
நீங்கள் வேலை செய்கிறீர்களா?

Where do you work?
நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?

I don't work.
நான் வேலை செய்வதில்லை.

Don't you work?
நீங்கள் வேலை செய்வதில்லையா?

Why don't you work?
நீங்கள் ஏன் வேலை செய்வதில்லை.


He is a doctor.
அவர் ஒரு வைத்தியர்.

Is he a doctor?
அவர் ஒரு வைத்தியரா?

He is not a doctor.
அவர் ஒரு வைத்தியரல்ல.

Isn't he a doctor?
அவர் ஒரு வைத்தியரல்லவா?

Do it for me.
எனக்காக அதை செய்யுங்கள்.

Don't do it for me.
எனக்காக அதை செய்ய வேண்டாம்.

Can you do it for me?
எனக்காக அதை செய்ய முடியுமா?

I will do it for you.
நான் உங்களுக்காக அதை செய்வேன்.

I can't do it for you.
உங்களுக்காக என்னால் அதை செய்ய முடியாது.

Why can't you do it for me?
ஏன் உங்களால் எனக்காக அதை செய்ய முடியாது?

I went to see a doctor.
நான் ஒரு மருத்துவரை பார்க்கச் சென்றேன்.

Did you go to see a doctor?
நீங்கள் ஒரு மருத்துவரை பார்க்கச் சென்றீர்களா?

I didn't go to see a doctor.
நான் ஒரு மருத்துவரை பார்க்கச் செல்லவில்லை.

Didn't you go to see a doctor?
நீங்கள் ஒரு மருத்துவரை பார்க்கச் செல்லவில்லையா?
Previous Post Next Post