ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 70


'ஆங்கிலத்தில் பேசுவோம்' 
எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இலகுவாக்கும் நோக்கில் இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பட பயன்படுத்த முடியும்.

இங்கே அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


He is responsible for this.
இதற்கு அவன் பொறுப்பு.

Is he responsible for this?
இதற்கு அவன் பொறுப்பா?

He is not responsible for this.
இதற்கு அவன் பொறுப்பல்ல.

Isn't he responsible for this?
இதற்கு அவன் பொறுப்பல்லவா?

It is difficult to climb up.
மேலே ஏறுவது கடினம்.

Is it difficult to climb up?
மேலே ஏறுவது கடினமா?

It is not difficult to climb up.
மேலே ஏறுவது கடினம் அல்ல.

Isn't it difficult to climb up?
மேலே ஏறுவது கடினம் அல்லவா?

Kumar sells vegetables.
குமார் காய்கறி விற்கிறார்.

Does Kumar sell vegetables?
குமார் காய்கறி விற்கிறாரா?

Kumar doesn't sell vegetables.
குமார் காய்கறி விற்பதில்லை.

Doesn't Kumar sell vegetables?
குமார் காய்கறி விற்பதில்லையா?


They work against us.
அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

Do they work against us?
அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்களா?

They don't work against us.
அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுவதில்லை.

Don't they work against us?
அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுவதில்லையா?

I hate this.
நான் இதை வெறுக்கிறேன்.

Do you hate this?
நீங்கள் இதை வெறுக்கிறீர்களா?

I don't hate this.
நான் இதை வெறுப்பதில்லை.

Don't you hate this?
நீங்கள் இதை வெறுப்பதில்லையா?

All of us know about you.
எங்கள் அனைவருக்கும் உங்களைப் பற்றி தெரியும்.

Do you all know about us?
உங்கள் அனைவருக்கும் எங்களைப் பற்றி தெரியுமா?

All of us don't know about you.
எங்கள் அனைவருக்கும் உங்களைப் பற்றி தெரியாது.

Don't you all know about us?
உங்கள் அனைவருக்கும் எங்களைப் பற்றி தெரியாதா?
Previous Post Next Post